close
Choose your channels

12வது முறையாக தளபதி விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய்யுடன் நடிக்கும் முன்னணி காமெடி நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஆம், 'தளபதி 63' படத்தில் நடிகர் விவேக் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. நேற்று நடந்த கல்லூரி விழா ஒன்றில் நடிகர் விவேக் இதனை உறுதி செய்தார்.

'நேருக்கு நேர்', 'குஷி', 'பிரியமானவளே', 'பத்ரி',. 'ஷாஜஹான்', 'தமிழன்', 'யூத்', 'திருமலை'. 'உதயா', 'ஆதி', 'குருவி', போன்ற 11 படங்களில் விஜய்யுடன் நடித்துள்ள விவேக், 12வது முறையாக 'தளபதி 63' படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.