close
Choose your channels

சூர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் விஜே மணிமேகலை!

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தகவல் குறித்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இரண்டு விஜேக்கள் சூர்யாவின் உயரத்தையும் அமிதாப் உயரத்தையும் ஒப்பிட்டு கிண்டல் செய்ததோடு, அமிதாப்புடன் நடிக்கும்போது சூர்யா ஸ்டூல் மீது ஏறித்தான் நடிக்க வேண்டும் என்று கலாயத்தனர்.

இதற்கு சூர்யாவின் ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி திரையுலகினர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக விஷால், கருணாகரன், இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட விஜேக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதே சேனலில் பணிபுரியும் விஜே மணிமேகலை தனது சக விஜேக்களை கண்டிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் 'எவ்வளவு உயரங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு உயரனும் என்பதுதான் முக்கியம் என்ற 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வசனத்தை பதிவு செய்து சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.