close
Choose your channels

எல்லாரும் என்னையே டார்கெட் பண்றாங்க: விஜே மணிமேகலை புலம்பல்

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் விடுமுறை ஆரம்பித்ததிலிருந்தே திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் நகைச்சுவையான மற்றும் சீரியஸான வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த வகையில் பிரபல விஜே மணிமேகலையும் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தன்னுடைய கிராமத்து நண்பர்களுடன் இணைந்து எடுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் தற்போது கிராமத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் அவர் ஒரு விளையாட்டு விளையாடுகிறார். அந்த விளையாட்டில் அவரை அனைவரும் டார்கெட் செய்து தோற்கடித்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எல்லா கேம்லயும் என்னையவே டார்கெட் பண்றது இவங்களுக்கு வேலையாப் போச்சு. நான் தோற்பேன்னு நினைக்கவே இல்ல. கடைசியில் நான் கப்பித்தனமா தோத்துட்டேன்’ என்று புலம்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.