close
Choose your channels

'ஓடிடியில் ரிலீஸாகும் 'விக்ரம்' வேற மாதிரி இருக்கும்: ஆச்சரிய தகவல்

Thursday, June 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் போட்டி போட்டு நடித்து இருந்தனர் என்பதும், லோகேஷ் கனகராஜ் திரைக்கதையும், அனிருத்தின் இசையும் இந்த படத்திற்கு மிகப் பெரிய தூண்களாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இது குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனின் இளவயது காட்சிகள் சில இடம்பெற்றுள்ளதாகவும், அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த காட்சிகள் தயாராவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டதால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு திரையரங்குகளில் ‘விக்ரம்’ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் இளவயது காட்சிகள் ஓடிடியில் ரிலீஸாகும்போது இடம்பெறும் என்றும் அப்போது அந்த படம் வேற மாதிரி இருக்கும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.