close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் விவேக் கேரக்டரில் நடிப்பது யார்?

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக சில பிரச்சனைகள் இருந்தாலும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்து வந்த விவேக், எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமாகி விட்டதால் அவரது கேரக்டரை எப்படி நகர்த்துவது என்று படக்குழுவினர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

விவேக் கேரக்டரை படத்தில் இருந்து நீக்கி விடலாமா? அல்லது அவரது கேரக்டருக்கு பதில் வேறு நடிகரை தேர்வு செய்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசனை நடந்து வந்ததாகவும் தற்போது விவேக்கிற்கு பதில் மாற்று நடிகரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் விவேக் கேரக்டரில் தற்போது நடிக்க உள்ளவர் குரு சோமசுந்தரம் என்று கூறப்படுகிறது. ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் சமீபத்தில் வெளியான சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.