close
Choose your channels

கமல் படத்தை ஏன் இயக்கவில்லை? பி.வாசு விளக்கம்

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பணக்காரன்', 'மன்னன்', 'உழைப்பாளி', 'சந்திரமுகி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. ரஜினி படங்கள் மட்டுமின்றி சத்யராஜ், பிரபு, அஜித், உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இயக்காத பெரிய நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இதுகுறித்து பி.வாசு கருத்து தெரிவித்தபோது, 'கமல் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று முறை அவரை சந்தித்து கதையும் கூறி ஓகே ஆனது. அந்த படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் அவர் 'தசாவதாரம்' படத்தில் கமிட் ஆனார்.

அப்போது அவர் என்னை அழைத்து 'தசாவதாரம்' படத்தில் 10 வேடத்தில் நடிக்கின்றேன். அடுத்த படத்தில் 3 வேடம் என்றால் அது சரியாக இருக்காது. எனவே கொஞ்சம் கேப் விட்டு நாம் இந்த படத்தை பண்ணுவோம் என்று கூறினார். ஆனால் அதன்பின்னர் நான் அந்த படம் குறித்து அவரிடம் பேசவில்லை' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.