close
Choose your channels

விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? 'பீஸ்ட்' அனுபவங்களை மனம்திறந்து கூறிய பூஜா ஹெக்டே!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாம் அனைவரும் விஜய்யை ஏன் சூப்பர் ஸ்டார் என சொல்கிறோம் என ‘பீஸ்ட்’ படத்தின் அனுபவங்களை மனம்திறந்த பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த தனது அனுபவங்களை ரசிகர்களுடன் அவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது:

நான் விஜய்யை முதலில் பார்த்த போது மிகவும் ஆச்சரியமடைந்தேன். 64 படங்களில் நடித்துள்ள அவர் மிகவும் எளிமையானவராகவும் அன்பாகவும் இருக்கிறார். அதுமட்டுமின்றி நான் பணியாற்றிய ஹீரோக்களில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர் விஜய் தான் என நினைக்கிறேன்.

படப்பிடிப்புக்கு சீக்கிரம் வருகிறார், பேக்கப் செய்யும் வரை இருக்கிறார். ஒரு நிமிடத்தை கூட அவர் வீணாக்குவதில்லை. இவ்வளவு கடின உழைப்பாளியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஒரு படத்தில் அவரது கேரக்டர் மட்டுமின்றி மற்றவர்களின் கேரக்டர்களும் பிரகாசிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவரை சூப்பர் ஸ்டார் என்று கூறினால் அது விஜய்தான் என்றும் பூஜா ஹெக்டே கூறினார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.