close
Choose your channels

யோகிபாபு எடுக்கும் 3வது அவதாரம்

Wednesday, December 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு தற்போது ஹீரோவுக்கு இணையான முக்கிய வேடங்களில் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். 'தர்மபிரபு', 'கூர்கா' மற்றும் 'ஜோம்பி' ஆகிய படங்களில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே காமெடி நடிகரில் இருந்து ஹீரோ அவதாரம் எடுத்துள்ள யோகிபாபு தற்போது வசனகர்த்தா என்ற 3வது அவதாரத்தையும் எடுத்துள்ளார். ஆம், 'தர்மபிரபு' படத்தில் எமன் கேரக்டரில் நடிக்கும் யோகிபாபு, இந்த படத்திற்காக தனது பகுதியின் வசனங்களையும் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

யோகிபாபு, கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி உள்பட பல்ர் நடித்து வரும் இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இயக்கியுள்ள விமல், வரலட்சுமி நடித்த 'கன்னிராசி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.