close
Choose your channels

கவினின் 'ஸ்டார்' திரைப்படத்தில் இத்தனை பாடல்களா? இசை ராஜ்யமே  நடத்தியிருக்கிறார் யுவன்..!

Saturday, May 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகி உள்ள நிலையில் அதில் இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா மொத்தம் பத்து பாடல்களை கம்போஸ் செய்து உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்காக ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தி உள்ளார் என்பது தெரிகிறது. ஸ்டார் படத்திலிருந்து இடம்பெற்ற அந்த பாடல்களை பிளாக் லிஸ்ட் முழு விவரங்கள் இதோ:

1. ஷூட்டிங் ஸ்டார் என்ற பாடல் - பாடகர்: ஆதித்யா பாடலாசிரியர்: மாதேவன் தியாகராஜன்

2. பட்டர்பிளை என்ற பாடல் - பாடகர்: ஆதித்யா பாடலாசிரியர்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்

3. தி பர்ஸ்ட் ரெயின் என்ற பாடல் - பாடகர்: யுவன் சங்கர் ராஜா, ப்ரியா பாடலாசிரியர்: இளன்

4. ஸ்டார் இன் தி மேக்கிங் என்ற பாடல் - பாடகர்: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: இளன்

5. விண்டேஜ் லவ் என்ற பாடல் - பாடகர்: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: கபிலன்

6. காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்: பாடகர்: யுவன் சங்கர் ராஜா

7. ஜிமிக்கி கஜல் என்ற பாடல் - பாடலாசிரியர்: நிரஞ்சன் பாரதி

8. மெலோடி என்ற பாடல் - பாடகர்: ஷாய்ஷாரன், தீபக் புளூ, வேலு, செண்பகராஜ் பாடலாசிரியர்: இளன்

9. ஸ்டார் இன் தி மேக்கிங் என்ற பாடல் - பாடகர்: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: இளன்

10. ஹார்மோனி ஆஃப் ஹார்ட்ஸ்: பாடகர்: பாடகர்: யுவன் சங்கர் ராஜா

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் நான்கு அல்லது ஐந்து பாடல்கள் மட்டுமே ஒரு திரைப்படத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் ’ஸ்டார்’ திரைப்படத்தில் பத்து பாடல்களிடம் பெற்றிருப்பது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்குமா என்பதை படம் வெளியானவுடன் பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.