close
Choose your channels

'தல ரஜினி இன்னும் மாறவே இல்லை.. ரஜினி எப்போ 'தல' ஆனார்.. பிரபலத்தின் பதிவு..!

Sunday, May 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தல ரஜினிகாந்த் இன்னும் மாறவே இல்லை என்றும் அவர் கிரேட்டஸ்ட் நபர்’ என்று பிரபலம் ஒருவர் தான் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ’ரஜினி எப்போ தல ஆனார்’ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தல என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது அஜித் தான் என்பதும் ஆனால் அஜித்தும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் அஜித் அல்லது அஜித் குமார் அல்லது ஏகே என்று அழைக்கலாம் என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது தோனியை மட்டுமே ‘தல’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’வேட்டையன்’ படத்தில் இணைந்து நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருடன் நடித்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் ’தல ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு சந்தோஷம் மற்றும் பெருமை கொள்கிறேன். மிகச் சிறந்த நட்சத்திர அந்தஸ்து இருந்தபோதும் அவர் ஒரு சிறு துளி கூட மாறவில்லை, அதே எளிமை அடக்கம் ஆகியவற்றுடன் சாதாரணமாக இருக்கிறார்’ என்றும் ஆச்சரியத்துடன் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் ’ரஜினி எப்போ தல ஆனார்’ என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.