close
Choose your channels

2வது கட்டத்திற்கு சென்ற யோகிபாபுவின் 2 படங்கள்

Friday, January 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு ஒரே நேரத்தில் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் ஆகும் படங்களில் ஒரு படத்திலாவது யோகிபாபு நடித்திருக்கின்றார் என்பதே அவர் எந்த அளவுக்கு பிசியாக இருக்கின்றார் என்பதை நிரூப்பிக்கின்றது.

இந்த நிலையில் காமெடி வேடங்களில் கலக்கி வரும் யோகிபாபு ஒரே நேரத்தில் 'தர்மபிரபு' மற்றும் 'ஜோம்பி' ஆகிய இரண்டு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகிபாபுவின் 'தர்மபிரபு' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் வரும் திங்கள் முதல் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் 'ஜோம்பி' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.