close
Choose your channels

'கப்பல்' நாயகன் நடிக்கும் 'ஆதாமும் ஆப்பிள்களும்'

Thursday, July 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்ரீகாந்த், சினேகா நடித்த 'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி அதற்கு பின்னர் தனுஷின் 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்', மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார். இதன்பின்னர் நடிகராக மாற்றிய எஸ்.எஸ்.ஸ்டான்லி, பெரியார்' படத்தில் அண்ணாத்துரை வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


இந்நிலையில் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'ஆதாமும் ஆப்பிள்களும்' என்ற டைட்டில் வைக்கபட்டுள்ளது. இந்த படத்தில் வைபவ், தன்ஷிகா ஜோடியாக நடிக்கின்றனர்.

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற உணர்ச்சிமயமாக காதல் கதை ஒன்றை படமாக்குவதாகவும், இந்த படம் கண்டிப்பாக இளையதலைமுறைகளை கவரும் என்றும் எஸ்.எஸ்.ஸ்டான்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷங்கர் தயாரித்த 'கப்பல்' படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்ற வைபவ், 'ஆதாமும் ஆப்பிள்களும்'படம் தனக்கு திருப்புமுனையை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.