close
Choose your channels

இன்று மாலை 'இறைவி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

Saturday, April 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இன்று மாலை 6.30 மணிக்கு படக்குழுவினர் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும், அந்த வீடியோவில் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த விபரங்கள் உள்ளதாகவும் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு கார்த்திக் சுப்புராஜின் சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இன்று மாலை தெரியவரும்
விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.