close
Choose your channels

15 வயதில் தொடங்கிய நடிப்பு.. திரையுலகில் 19 ஆண்டுகள்.. தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா திரையுலகில் 15 வயதில் நாயகியாக அறிமுகமாகி கடந்த 19 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ஒரு பிசியான நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையுலகில் 19 ஆண்டுகள் பூர்த்தி செய்த நடிகை தமன்னாவுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நடிகை தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வெறும் 15 வயது தான் என்பதும் 15 வயதிலேயே அவர் நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து அவர் மனோஜ் மஞ்சு நடித்த தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். இதனை அடுத்து மூன்றாவது படமாக அவர் தமிழில் ’கேடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்தார் என்பதும் சில வெப் தொடர்களில், மியூசிக் வீடியோக்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஆர்யா, தனுஷ், சிம்பு, விஷால், பரத், பிரபுதேவா, என பல முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் தெலுங்கு திரை உலகிலும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

தற்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக 2 ஹிந்தி படங்கள் ஒரு தமிழ் மற்றும் ஒரு தெலுங்கு என நான்கு படங்களில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த தமன்னாவுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.