close
Choose your channels

அமலாபால் மடியில் அழகான குழந்தை.. வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, March 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது மடியில் அழகான குழந்தை ஒன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் அஜித், விஜய் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு உள்பட ஒரு சில மொழிகளில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து அமலாபால் திருமணம் செய்து கொண்ட நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் என்பதும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மடியில் ஒரு அழகான குழந்தையை வைத்து உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’ஹாப்பி கிட்ஸ்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து யார் இந்த குழந்தை? என்ற கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள் ’உங்களுக்கும் இதே போல அழகான குழந்தை பிறக்கும்’ என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகிய நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.