close
Choose your channels

விமல் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகை.. சம்பளம் இத்தனை லட்சமா?

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விமல் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட பாலிவுட் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமல், பிந்து மாதவி நடிப்பில் எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’தேசிங்கு ராஜா’. இந்த படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகமான ’தேசிங்கு ராஜா 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பிரபல பாலிவுட் நடிகை சினேகா குப்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பல பாலிவுட் படங்களில் நடித்திருந்த நிலையில் ’தேசிங்குராஜா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட 50 லட்சம் சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கான செட் அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.

விமல் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் புஜிதா என்பவர் நாயகியாக நடிப்பதாகவும் லொள்ளு சபா சுவாமிநாதன், சிங்கம் புலி, சாம்ஸ், புகழ் உள்பட பலர் இந்த படத்தில் நடிப்பதாகவும் வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எழில் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.