close
Choose your channels

எலிமினேஷனில் புது ட்விஸ்ட்.. தப்பித்தார் மாயா.. அப்படியென்றால் எவிக்ட் செய்யப்பட்டது யார்?

Friday, December 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எலிமினேஷனில் புது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா, நிக்சன் மற்றும் மாயா ஆகிய ஏழு பேர்கள் நாமினேஷனில் இருந்தனர். இதில் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் மாயா மிகவும் குறைந்த வாக்குகள் எடுத்து இருந்ததால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி ரவீனா இந்த வாரம் வெளியேறி உள்ளதாக தெரிகிறது. மாயா, நிக்சனை விட அதிகமாக ரவீனா வாக்குகள் வாங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுவதால் மாயா இந்த வாரமும் தப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் இனிவரும் வாரங்களில் என்னென்ன ட்விஸ்ட் நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.