close
Choose your channels

இதுவரை இல்லாத வித்தியாசமான மேக்கப்.. 'லியோ' படப்பிடிப்பில் அர்ஜூன்..!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்பட பல இடங்களில் நடைபெற்றது என்பதும் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான மேக்கப் அவருக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை தரும் என்று கூறப்படுகிறது.

மேலும் விஜய் - அர்ஜுன் மோதும் காட்சிகள் இந்த படத்தில் இருந்தாலும் இந்த படத்தில் அர்ஜுன் வில்லன் இல்லை என்றும் அவருடைய கேரக்டர் மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் வில்லன் கேரக்டரில் அடுத்து வரும் நிலையில் அர்ஜுன் கேரக்டர் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.