close
Choose your channels

விஜய் டிவிக்கு வந்த நடிகர் அப்பாஸ்.. அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்குமா?

Saturday, August 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் அப்பாஸ் என்பதும் அவருக்கு 1990களில் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சரியான படத்தை தேர்வு செய்யாமல் இருந்தது, சரியான வழிகாட்டுதல் இல்லாதது ஆகியவை காரணமாக அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த அப்பாஸ் அதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிச் சென்றார். அதன் பிறகு அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை திரும்பிய அப்பாஸ் பேட்டி அளித்தபோது மீண்டும் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது குறித்து புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.

90களில் கனவு நாயகன் என்று பெருமைப்படுத்தி அப்பாஸ் மேடைக்கு அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்ச்சியை அவர் உற்சாகமாக பார்த்து ரசித்த காட்சிகளும், கலர்வெடி கோகுல் பாடிய பாடலை ரசித்து கேட்டதோடு, அவருடன் அப்பாஸ் டான்ஸ் ஆடிய காட்சிகளும் புரமோவில் உள்ளது.

இதனை அடுத்து அவர் மீண்டும் தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.