close
Choose your channels

சென்னை அப்பல்லோவில் பிரபல நடிகர் அனுமதி.. நேரில் நலம் விசாரித்த பூச்சிமுருகன்

Thursday, January 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நலம் விசாரித்தார்.

தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தவர் நடிகர் மனோபாலா. அதுமட்டுமின்றி இவர் சில படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் சில படங்களை இயக்கியுள்ளார் என்றும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் மனோபாலாவை நேரில் சென்று நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நலம் விசாரித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் மனோபாலா விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.