close
Choose your channels

கன்னடர்களின் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. பிரபல நடிகர் ட்விட்..!

Friday, September 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் தனது ’சித்தா’ படத்தின் புரமோஷன் பணியில் இருந்தபோது திடீரென கன்னடர்கள் சிலர் விழா நடந்த இடம் இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த புரமோஷன் விழாவை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கன்னடர்களின் இந்த செயலுக்கு தான் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:

பல ஆண்டுகளாக இருக்கும் இந்த பழமையான பிரச்சினையை தீர்க்க தவறிய அனைத்து அரசியல்வாதிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக, சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படி தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு கன்னடராக, கன்னடர்கள் சார்பில் சித்தார்த் இடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.