close
Choose your channels

ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் வருகை புதிருக்கு கிடைத்த விடை

Sunday, May 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் வருகை புதிருக்கு கிடைத்த விடை

கடந்த சில நாட்களாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் தனிக்கட்சி ஆரம்பிக்க அவர் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள ஒருசில சுவர்களில் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் விளம்பரமும் கொடியும் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ஆர்.ஜே.பாலாஜியும் தனது சமூக வலைத்தளத்தில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்திருந்தார்.

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் புதிருக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அரசியல் படம் ஒன்றின் ரீமேக் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் விளம்பரமாகத்தான் அவருடைய அரசியல் குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 18ஆம் தேதி வெளிவரவுள்ளதாகவும், அன்றைய தினம் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.