close
Choose your channels

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விளக்கம் கொடுத்த சத்யராஜ்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து மோதல்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் அவ்வப்போது கிளம்புவது உண்டு. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் கருத்து குறித்து ரஜினிக்கு எதிராகத்தான் சத்யராஜ் கூறுவார் என்று நினைத்த நிலையில் அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் என்றால் கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி தான் ஞாபகத்துக்கு வருகிறார். எனவே அவர்தான் சூப்பர் ஸ்டார், அதை யாரும் மாற்றக்கூடாது என்று தெரிவித்தார். அதேபோல் தளபதி என்றால் விஜய் தான், தல என்றால் அஜித் தான் என்றும் சத்யராஜ் கூறியுள்ளார்.

தற்போது 'அங்கராகன்’ என்ற திரைப்படத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் வில்லனாக நடிக்கிறார். அப்பா கேரக்டரில் நடித்து போரடித்து விட்டது என்றும் அதனால் வித்தியாசமான வில்லன் கேரக்டரை ஏற்று நடித்து வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் என தற்போது 20 படங்களில் தான் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.