close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை காப்பாற்ற விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை காப்பாற்றுவதற்காக விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த நடிகர் ஒருவர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கொரோனா வைரஸ் காலத்தில் உதவி செய்த நடிகர் என்றால் அனைவர் மனதிலும் உடனே ஞாபகத்திற்கு வருவது நடிகர் சோனு சூட் தான். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய நிலையில் அவருக்காக விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்
நாக்பூரைச் சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கூறினர். இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான உதவி கிடைக்கவில்லை

இதனையடுத்து அவரது உறவினர்கள் டுவிட்டரில் பதிவு செய்தனர். அவரது டுவிட்டை பார்த்த சோனுசூட், உடனடியாக வென்டிலேட்டர் வசதியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை மாற்றும் முயற்சியை தொடங்கினார். இதுகுறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களிடம் பேசிய அவர் விமான ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அந்தப் பெண் நோயாளியை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கான அனுமதி உடனடியாக பெறப்பட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் தற்போது அந்த பெண் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் சோனு சூட் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.