close
Choose your channels

கையிலும் ஐஸ்கிரீம், பக்கத்திலயும் ஐஸ்கிரீம்.. நடிகையுடன் டேட்டிங்கில் வினய்.. ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் வினய் பிரபல நடிகை விமலா ராமனுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் கோடை விடுமுறைக்கு ஹங்கேரி நாட்டிற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய். அதன் பிறகு அவர் நடித்த ’ஜெயங்கொண்டான்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. ’மிரட்டல்’ ’ஒன்பதுல குரு’ ’என்றென்றும் புன்னகை’ ’துப்பறிவாளன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த வினய், சமீபத்தில் ’டாக்டர்’ ’எதற்கும் துணிந்தவன்’ ’கனெக்ட்’ போன்ற வெற்றி படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ’டீசல்’ ’ஹனுமான்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’டேம் 999’ என்ற திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை விமலா ராமனுடன் வினய் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை வினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

’ஐஸ்கிரீம் அண்ட் மோர்’ என்ற கேப்ஷன் உடன் வினய் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. வினய் கையிலும் ஐஸ்கிரீம், பக்கத்திலயும் ஐஸ்கிரீம் போன்ற நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.