close
Choose your channels

மீண்டும் தீவிர அரசியலில் நடிகை கெளதமி .. முக்கிய கட்சியில் இணைந்ததால் பரபரப்பு..!

Wednesday, February 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கெளதமி கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் திடீரென இன்று அவர் தமிழகத்தின் முன்னணி கட்சியில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியில் சேர்ந்து வருவதும் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருவதுமான காட்சிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்த நடிகை கௌதமி, கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் திடீரென விலகினார்.

இந்த நிலையில் இன்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது நடிகை கெளதமியும் அதிமுகவில் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இணைந்துள்ள கெளதமிக்கு கட்சி பொறுப்பு அளிக்கப்படுமா? அல்லது வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.