close
Choose your channels

பிரபல நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? நடிகை ஹன்சிகாவின் கோபமான பதிவு..!

Wednesday, May 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஹன்சிகாவுக்கு பிரபல நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான செய்திக்கு அவர் கோபமாக தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆனால் அவருக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் பேட்டி அளித்ததாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்திக்கு நடிகை ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இப்படி ஒரு பேட்டியை அளிக்கவே இல்லை என்றும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்னர் அதன் உண்மை தன்மையை அறிந்து வெளியிடவும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஹன்சிகாவுக்கு பிரபல நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பின்னரும் ஐந்து தமிழ் படங்கள், இரண்டு தெலுங்கு படங்கள் என திரையுலகில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.