close
Choose your channels

ஹேர் ஸ்டைலில் புதுமை காட்டி ரசிகர்களை ஈர்த்த “மாநாடு“ நடிகை!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “மாநாடு“. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஏற்கனவே இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ஹீரோ” படத்தில் நடித்திருந்தார்.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான இவர் தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “மரக்கர்“ திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது “ப்ரோ டாடி“, “ஹரிதாஸ்“, “தல்லுமாலா” போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தன்னுடைய ஹேர் ஸ்டைலை முற்றிலும் மாற்றியிருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷனைப் பார்த்து பிரபல நடிகர் துல்கர் சல்மான் “யாருமா இந்த பொண்ணு ஆளே.. அடையாளம் தெரியல“ எனப் பதிவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கர்லிங் ஹேர் வைத்துள்ள நடிகைகளை ரசிகர்கள் வியந்து வியந்து பாராட்டி வரும் நிலையில் தற்போது அந்த லிஸ்டில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் இணைந்துள்ளார். இவருடைய புது ஹேர் ஸ்டைல் புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்கள் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.