close
Choose your channels

நீச்சல் குளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. செம வைரல் புகைப்படங்கள்!

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை மிகப் பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் விஷால் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிரபல நடிகையாக உள்ளார் என்பதும் தெரிந்ததே.

’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனுக்கும் அதிகம்.

இந்த நிலையில் தற்போது தாய்லாந்து இன்பச் சுற்றுலா சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்குள்ள கடற்கரை அருகேயுள்ள உள்ள நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ’மாமனிதன்’ மற்றும் ’சைரன்’ ஆகிய படங்களிலும் தெலுங்கில் ’போலோ சங்கர்’, ‘தசரா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.