close
Choose your channels

'இயற்கை' படத்தில் அறிமுகம், முதலமைச்சருடன் திருமணம்.. குட்டி ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Friday, March 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’இயற்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை குட்டி ராதிகா முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது குடும்பத்துடன் கூடிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா ’இயற்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் 'வர்ணஜாலம்’ ’மீசை மாதவன்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் கடந்த ஆண்டு கூட அவரது அவரது நடிப்பில் இரண்டு கன்னட படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குட்டி ராதிகா ’பைரவி தேவி’ என்ற கன்னட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குட்டி ராதிகா கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை குட்டி ராதிகாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். செம ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.