close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் கன்பர்ம் ஆன விஜய் பட நடிகை

Wednesday, June 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த நாயகிகளில் ஒருவரும், விஜய் நடித்த குஷி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மும்தாஜ், வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தூள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்திலேயே மும்தாஜூக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அவரால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிடைத்த புகழ், சினிமா வாய்ப்புகள் ஆகியவற்றை பார்த்து இரண்டாம் சீசனில் கலந்து கொள்ள மும்தாஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரசாந்த் நடித்த 'சாக்லேட்' படத்தில் 'மல மல' என குத்தாட்டம் போட்டு அன்றைய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த மும்தாஜ், பிக்பாஸ் வீட்டிலும் கவர்ச்சி குத்தாட்டம் ஆடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.