close
Choose your channels

சொந்தமாக ஓடிடி தளம் தொடங்கிய அஜித்-விஜய் பட நாயகி!

Friday, May 7, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் மற்றும் தல அஜித்துடன் நடித்த நடிகை ஒருவர் சொந்தமாக ஓடிடி தளத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்

தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ அஜித் நடித்த ’பில்லா ’உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நமீதா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நமீதா தற்போது சொந்தமாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஓடிடி தளத்திற்கு ’நமீதா தியேட்டர்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. நமீதாவின் இந்த ஓடிடி தளத்திற்கு ரவி வர்மா என்பவர் மேனேஜிங் டைரக்டர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்றும் இவர் பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ கோர்ஸ் படித்தவர் என்றும், அதுமட்டுமின்றி பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவி வர்மா அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் அவர் கொடுத்த ஐடியா தான் ’நமிதா தியேட்டர்’ என்ற ஓடிடி தளம் தொடங்கப்பட்டது என்றும், இந்த ஓடிடி தளத்தில் முழுக்க முழுக்க உண்மை கதைகள் கொண்ட குறும்படங்கள் வெளியிடப்படும் என்றும் நமீதா தெரிவித்துள்ளார்.

புதிதாக திரையுலகில் நுழையும் நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல தளம் என்றும் அவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் நமீதா தெரிவித்துள்ளார். நமிதா ஓடிடி தியேட்டரில் வெளியாகும் முதல் குறும்படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz