close
Choose your channels

மேக்கப் இல்லாமல் நடிகை நிரோஷா.. ரசிகர்களின் மலரும் நினைவுகள்..!

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் பதிவு செய்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது மலரும் நினைவுகளின் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நிரோஷா. நடிகை ராதிகாவின் சகோதரியான இவர் முதல் படத்திலேயே நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு கமல்ஹாசன் உடன் ’சூரசம்ஹாரம்’ விஜயகாந்த் நடித்த ’செந்தூரப்பூவே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த அவர் சீரியல்களிலும் நடித்தார் என்பதும் குறிப்பாக’ சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிரோஷா நடிகர் ராம்கியை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை நிரோஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன்னனர் அவர் மேக்கப் இல்லாமல் பதிவு செய்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.