close
Choose your channels

வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைக்கு தாயான பிரபல பாலிவுட் நடிகை!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்துவருகிறார். அவர் தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “தில் சே“ படத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இந்தப் படம் தமிழில் “உயிரே“ என்ற பெயரில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ப்ரீத்தி ஜிந்தா கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டிவந்தார்.

அந்த வகையில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக இருப்பதோடு அந்த அணியின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். கூடவே பாலிவுட் சினிமாவில் கவுரவத் தோற்றத்திலும் அவ்வபோது நடித்து வருகிறார். இதையடுத்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனது நீண்டகால நண்பர் Gene Goodenough என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் 46 வயதான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தற்போது வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார். இதனால் அவரது கணவர் Gene Goodenough யும் தானும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்த அவர் தங்களது குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா குட், ஜியா ஜிந்தா குட் எனப் பெயர் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதை அடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.