close
Choose your channels

நாய்க்குட்டியுடன் நடிகை ரம்பா: வைரல் புகைப்படங்கள்!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்பா தனது செல்ல நாய் குட்டி உடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கடந்து 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ விஜய் நடித்த ’நினைத்தேன் வந்தாய்’ அஜித் நடித்த ‘ராசி’ உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ரம்பா என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ரம்பா கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார் என்பதும், இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரம்பா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தினர்களின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவர் பதிவு செய்ய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை ரம்பா தனது நாய்க்குட்டி உடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.