close
Choose your channels

'அம்மாட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. அதிதி ஷங்கரின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Tuesday, April 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், கார்த்தி நடித்த ’விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பதும் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’மாவீரன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்திலும் அதிதி ஷங்கர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி ஷங்கர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வித்தியாசமான காஸ்ட்யூம் அணிந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ‘அம்மா கிட்ட சொல்லி சுத்தி போடுங்க’ என்பது உள்பட பல பாசிட்டிவ் கமெண்ட்கள் பதிவாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.