close
Choose your channels

இளையராஜாவை அடுத்து அவருடைய நண்பரின் பயோபிக் திரைப்படம்.. பிரபல இயக்குனர் தகவல்..!

Tuesday, March 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ’இளையராஜா’ என்ற டைட்டிலில் உருவாக உள்ளது என்பதும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இளையராஜாவை அடுத்து அவருடைய நெருங்கிய நண்பரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் விரைவில் உருவாக்கப்படும் என பிரபல இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடித்த ’கள்வன்’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட அவர் இளையராஜா மட்டுமல்ல பாரதிராஜா அவர்களும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என்றும் அவரை நான் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இந்த காட்சியை இந்த படத்தில் எப்படி எடுத்தீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றும் அவருடைய ஒவ்வொரு படத்திலும் இருந்து நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு போல் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அப்படி ஒரு படம் விரைவில் உருவாகும் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்குனர் லிங்குசாமி கூறியது போல் இளையராஜாவின் பயோபிக் போலவே பாரதிராஜாவின் பயோபிக் உருவாகுமா? அப்படி உருவானால் அவருடைய கேரக்டரில் யார் நடிப்பார்கள்? யார் இயக்குவார்கள்? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.