close
Choose your channels

2 வருடங்களுக்கு பின் திருமண புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை

Friday, February 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் மட்டும் நடந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை ஸ்ரேயா ஒப்புக்கொண்டாலும் திருமண புகைப்படங்களை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்றைய காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரேயா திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பின் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் இந்திய முறைப்படி மணமக்கள் உடை அணிந்துள்ளனர். பாரம்பரிய முறையில் நடந்த இந்த திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா தற்போது ’சண்டக்காரி’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்’ உள்ளிட்ட ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.