close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 62' அப்டேட் எப்போது? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய தகவல்..!

Sunday, April 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62 வது படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அஜித்தின் 62வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

மேலும் அஜித்தின் தந்தை சமீபத்தில் இறந்ததால் ’ஏகே 62’ படத்தின் அறிவிப்பு தாமதமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அடுத்த வாரம் ’ஏகே 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் டைட்டிலையும் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.