close
Choose your channels

வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் படமா? இணையத்தில் வைரலாகும் தகவல் சாத்தியமா?

Thursday, November 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அஜித்தின் 64வது படமாக இந்த படம் உருவாகும் என்றும் இணையத்தில் ஒரு செய்தி பரவி வரும் நிலையில் அந்த செய்தி சாத்தியமில்லை என்று கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 63 வது படமாக அமையும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் ’விடுதலை’ படத்தை தயாரிக்கும் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

வெற்றிமாறன் ஏற்கனவே ’விடுதலை 2’ படத்தை முடிக்க இன்னும் கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது. இதை முடித்துவிட்டு அவர் தனது கனவு திரைப்படமான ’வாடிவாசல்’ படத்தை தொடங்க உள்ளார். அந்த படத்தை முடிக்க அவருக்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும். அதன் பிறகு அவர் அஜித் படத்திற்கு திரும்புவாரா என்பதை இப்போதே கூற முடியாது என்றும் சூழ்நிலைகள் அப்போது மாற வாய்ப்பு இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

எனவே அஜித்தின் 64 வது படம் குறித்து தற்போது வெளியாகி கொண்டிருக்கும் தகவல் இப்போதைக்கு வதந்தியாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.