close
Choose your channels

அஜித்தின் 'வலிமை' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

அதன்படி சற்று முன் வெளியான தகவலின்படி நாளை ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் பைக் சேஸிங் மேக்கிங் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்திய நிலையில் நாளை வெளியாகும் டிரைலரில் அஜீத்தின் பைக் சேஸிங் மற்றும் ஆக்சன் காட்சிகள் நிச்சயம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.