close
Choose your channels

இளைஞர்களுக்கு அஜித் ஒரு ரோல்மாடல்: பிரபல இயக்குனர்  

Monday, March 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 3 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றார் என்று செய்தி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் டிரெண்ட் ஆகி வருகிறது. ’வலிமை’ அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் தற்போது அஜித் தங்கப் பதக்கங்களையும் வெள்ளிப் பதக்கங்களையும் வாங்கியதை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜித்துக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளரும், இயக்குனருமான சேரன் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் இளைஞர்களுக்கு ஒரு பாராட்டுக்குரிய ரோல் மாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு வரையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.. எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர்.... சினிமாவில் நடிகனாக மட்டுமில்லாமல் தனது மற்ற திறமைகளை வெளிக்கொணரும் அஜித் சார் பாராட்டுக்குரிய ஒரு ரோல் மாடல் இளைஞர்களுக்கு. சேரனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.