close
Choose your channels

நடிகர் சரத்பாபு நலமுடன் உள்ளார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகர் சரத்பாபு நலமுடன் உள்ளார் என்றும் அவரை சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மையானது அல்ல என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் திடீரென காலமாகி விட்டதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் சரத்பாபு குடும்பத்தினர் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். சரத்பாபு குறித்து பரவி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று அவரது சகோதரி தெரிவித்துள்ளார். சரத்பாபு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல் நலம் படிப்படியாக முன்னேறி வருகிறது என்றும் அவர் வேறு ஒரு அறைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் சரத்பாபு முழுமையாக குணமாகி ஊடகங்கள் முன் பேசுவார் என்று தயவு செய்து அவரைப் பற்றிய பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.