close
Choose your channels

சனிக்கிரஹத்திற்கு செல்லும் '2.0' பட நாயகி

Wednesday, September 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் நாயகி எமிஜாக்சனுக்கு அமெரிக்க டிவி தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் புகழ்பெற்ற டிவி தொடரான 'சூப்பர் கேர்ள்' தொடரின் மூன்றாவது பாகத்தில் சனிக்கிரகத்தின் பெண்ணாக நடிக்க எமிஜாக்சன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

சனிக்கிரகத்தின் நிலா டைட்டனில் பிறந்து வளரும் சூப்பர் கேர்ள், பூமிக்கு நிகழ இருக்கும் பேராபத்தை எப்படி தடுக்கின்றார் என்பதுதான் இந்த தொடரின் கதை. இதில் அவர் 'இர்மா அர்தீன்' என்ற வலிமையான கேரக்டரில் நடிக்கவுள்ளார். 

ஏற்கனவே எமிஜாக்சன் நடித்த '2.0 வரும் ஜனவரியில் ரிலீஸ் ஆகி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ள நிலையில் அமெரிக்க டிவி தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது அவருடைய மார்க்கெட் உச்சத்தை நோக்கி செல்வதை நிரூபணம் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.