close
Choose your channels

'கேப்டன் மில்லர்' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியிடம் அடி வாங்கியவர் யார்? என்ன நடந்தது..!

Thursday, January 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ரசிகர் ஒருவர் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் அடி வாங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொகுப்பாளினியின் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே ’சரக்கு’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் மாலை அணிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யா, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது அவரை ஒரு ரசிகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த இளைஞரை பிடித்து அடித்தது மட்டுமின்றி காலில் விழுடா, செருப்பு பிஞ்சிடும், நடிக்கிறியா நாயே, அப்புறம் ஏன் ஓடுன போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் இணையதளத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.