close
Choose your channels

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அனிருத்தின் டூப்

Wednesday, January 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். விஜய், அஜித் படங்கள் உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் அவ்வப்போது இவருக்கு சம்பந்தமே இல்லாத சர்ச்சைகளில் சிக்கி கொள்வது உண்டு.

அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்த உணர்வுபூர்வமான கருத்துக்கள் உலாவி வரும் நிலையில் நேற்று அனிருத் பாடியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் மிக வேகமாக பரவியது. அனிருத் வெளியிட்டதாக கூறப்பட்ட இந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது அனிருத் அல்ல என்ற உண்மை பின்னர்தான் அனைவருக்கும் தெரியவந்தது. அனிருத்தும் தனது சமூக இணையதளத்தில் இதுகுறித்து விளக்கமளித்து அந்த வீடியோவில் இருப்பது தன்னைப்போன்ற ஒருவர் என்றும் கூறியிருந்தார். அனிருத்தின் விளக்கத்திற்கு பின்னர் அவருடைய டூப்பின் பரபரப்பு அடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.