close
Choose your channels

நயன்தாராவின் 'அறம்' செய்த வசூல் சாதனை

Monday, December 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே மிகப்பெரிய ஓப்பனிங் மற்றும் சாதனை வசூலை பெற்று வரும் நிலையில் முதல்முதலாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள நயன்தாராவின் 'அறம்' திரைப்படம் வசூலில் சாதனை செய்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி இயக்கிய 'அறம்' திரைப்படம் கடந்த மாதம் 10ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'அறம்' திரைப்படம் தற்போது தமிழகத்தில் சுமார் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் ரூ.3.11 கோடி, கோவையில் ரூ.3.4 கோடி, செங்கல்பட்டு பகுதியில் ரூ.5.6 கோடி, நெல்லை குமரி பகுதியில் ரூ.30 லட்சம், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.63 லட்சம் மற்றும் சேலம் பகுதியில் ரூ.44 லட்சம் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.