close
Choose your channels

தளபதி 64 படத்தில் இணைந்த நடிகரின் உணர்ச்சிவசமான டுவீட்:

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இந்த அந்தோணி வர்கீஸ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து ‘கைதி’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் இந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து ஒரு உணர்ச்சிகரமான டுவீட் ஒன்றை அர்ஜுன் தாஸ் பதிவு செய்து உள்ளார். அதில், ‘தளபதி 64’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த செய்தி அறிந்ததும் என்னால் எனக்கு பேச்சே வரவில்லை. இந்த உலகமே என் காலடியில் இருப்பதுபோல் உணர்ந்தேன். விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவருடன் நடிப்பது என்பது மிகப் மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டம். என்னை போன்ற புதுமுக நடிகர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு மிகவும் அரிதாகவே கிடைக்கும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ’தளபதி 64’ படப்பிடிப்பில் அர்ஜுன் தாஸ் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.