close
Choose your channels

அல்லு அர்ஜுன் படத்தில் அட்லியின் ஆஸ்தான நடிகை.. த்ரிஷா உண்டா? இல்லையா?

Monday, April 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் திடீரென சமூக வலைதளங்களில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் அனிருத் இணையும் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க போகிறார் என்றும் முதல் முறையாக அல்லு அர்ஜுன் உடன் அவர் இணைந்து நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிந்தது. மேலும் ’ஜவான்’ படத்திலும் நடிக்க சமந்தா தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவருக்கு உடல்நிலை காரணமாகத்தான் அந்த படத்தில் இருந்து விலகியதால் நயன்தாரா நடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அட்லியின் ஆஸ்தான நடிகையான சமந்தா இந்த படத்தில் இணைவாரா? இவர் த்ரிஷாவுக்கு பதில் நடிக்க போகிறாரா? அல்லது த்ரிஷா மற்றும் சமந்தா இருவருமே நடிக்க போகிறார்களா? என்பதை எல்லாம் இனி வரும் தகவல்களில் இருந்து தான் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.