close
Choose your channels

பிக்பாஸ் தமிழ்: கடைசியில இந்த வார எலிமினேஷன் இவர் தானா? 

Thursday, November 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யாராக இருக்கும் என்ற தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, ராபர்ட், ஆயிஷா, நிவாஸினி,  ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் யார் அதிக வாக்கு பெற்றவர் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

முதலாவதாக நாமினேஷன் பட்டியலில் இருக்கும் அசீம் மிகவும் சாமர்த்தியமாக விளையாடி வருகிறார் என்பது தான் சொல்லவேண்டும். முதல் மூன்று நாட்கள் அமைதியாக இருந்து வாக்குகளை பெற்று விட்டு அதன் பிறகு நான்காவது நாளில் தான் அவர் தனது உண்மையான சொரூபத்தை காண்பித்து சண்டையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே ஏற்கனவே மூன்று நாட்களில் அதிக வாக்குகளை வாங்கிய அசீம், நேற்று விக்ரமனுடன் சண்டை போட்டாலும் அவர் சேவ் ஜோனில் தான் இருக்கிறார் என தெரிகிறது.

ராபர்ட் மாஸ்டர் பெரிய அளவில் விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் ரக்சிதாவிடம் ரொமான்ஸில் ஆர்வம் காட்டி வருவதால் அவர் ஓரளவு வாக்குகள் பெற்று பாதுகாப்பான சேவ் ஜோனில் இருக்கிறார் என்று தெரிகிறது.

ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருமே இந்த வாரம் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி பார்வையாளர்களை நன்மதிப்பை பெற்று உள்ளதால் அவர்களுக்கும் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளதாக தெரிகிறது.

அதே போல் குவின்சி தனலட்சுமியிடம் இந்த வாரம் தைரியமாக தப்பை தட்டிக் கேட்டு பார்வையாளர்களின் கைத்தட்டல் பெற்றுள்ளார். எனவே அவரும் இந்த வாரம் எலிமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. 

இதனை அடுத்து நிவாஸினி மற்றும் ஆயிஷா ஆகிய இருவர்தான் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக தெரிகிறது. அதிலும் அசல் கோலார் வெளியேறியதில் இருந்து நிவாஸினி சுத்தமாக விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிவாஸினி எலிமினேட் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.